வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14

சமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலா?ஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரை!உமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான்! சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான்! மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது! உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது! ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள்! இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது! காந்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார்! மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்! கண்ணியத்தின் சின்னமான இஸ்மாயில் சாகிப் தன் ஓட்டு வீட்டுக்குத் தாமே ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார். கர்மவீரர் காமராஜர் தன் அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகத்தை தன் முஷ்டியில் அடக்கினார்.இந்தியாவின் விடுதலைக்காக காங்கிரசும், முஸ்லிம் லீகும் பாடுபட்டன. இரு கட்சிகளின் தேசியப் பற்றில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காந்திஜி 1940-களில் காங்கிரசையும், முகம்மது அலி ஜின்னா முஸ்லிம் லீகையும் வழி நடத்திச் சென்றனர். முஸ்லிம் லீகில் மற்ற மதத்தவர்கள் இல்லாவிட்டாலும் காங்கிரசில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருந்தார்கள். உதாரணம் மவுலான அபுல் கலாம் ஆசாத்! காங்கிரசை எங்கள் மாமா, மற்றும் S.K.M.H. அவர்களின் தந்தை ஆகியோரும், முஸ்லிம் லீகை என் தந்தை போன்றோரும் தீவிரமாக ஆதரித்தார்கள். ஆனால் இரு சாராரிடமும் வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான கொள்கை இருந்தது. தமிழ் நாட்டில் பெரியார், இராஜாஜி போன்றவர்கள் காங்கிரசில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் போன்றவர்கள் முஸ்லிம் லீகில் இருந்தார்கள். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் வடக்கே பிரிவினைகள் ஏற்பட்டன. தென்னாட்டில் அப்படிப்பட்ட நிலை இல்லை!1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடும்படி காந்திஜி சொன்னார்! காந்திஜிக்கு அப்போதே தெரிந்துவிட்டது, அரசியல் வாதிகள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவை கடித்துக் குதறிவிடுவார்கள் என்று! காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகினர். பெரியார், இராஜாஜி போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கினர். பெரியார் திராவிடக் கட்சியும் இராஜாஜி சுதந்திரா கட்சியும் ஆரம்பித்தனர். காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் தலைவரானார். இராமமூர்த்தி மற்றும் கல்யாண சுந்தரம் தலைமையில் கம்யூனிஸ்டு வலது இடது கட்சிகளும் தோன்றின. ஒவ்வொரு கட்சியும் உடைந்து, உடைந்து சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து, பல்கிப் பெருகிவிட்டன! அண்ணாதுரை, திராவிடக் கட்சியிலிருந்தும், ஈ.வி.கே. சம்பத், அண்ணா தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும், எம்.ஜி.ஆர்., கருணாநிதி தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் பிரிந்து, தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர்! அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் குட்டிகள் போட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. இதைத் தொடந்து ஜாதிக் கட்சிகளும் தோன்றின! தோன்றிக் கொண்டிருக்கின்றன! குப்பையை அள்ளி சாக்கடையில் போட்ட மாதிரி, சினிமாக்காரர்கள் அரசியலில் குதித்தார்கள். இதுவல்ல அதிசயம்! சினிமா நடிகர்கள் தங்கள் ஜாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்கள்! இது பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகள் நிறைந்த சாக்கடையில் அள்ளிப் போட்ட மாதிரி! போதாததற்கு திராவிட பேனருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் வேறு தோன்றியது! விடுதலை தந்த காந்தியைப் பின் பற்றப் போவதாக அரசியலில் குதித்தவர்கள், விஜய சாந்தியைப் பின் பற்றும் அரசியல் வாதிகளாக மாறினார்கள்!இந்த மாதிரியான அருவருக்கத்தக்க காரணங்களால் உமர் அரசியலை மேலும் வெறுத்தார். அரசியலை வெறுக்கும் பண்பு உமரிடம் எப்படி வந்தது? நான் உமருக்கு பெர்னார்ட்ஷா பற்றி சொல்லி இருக்கிறேன். அவரும் படித்திருக்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றம், பாராளுமன்றங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்கள் உலகத்திலேயே தரம் வாய்ந்த அரசியல் வாதிகள்! நம் நாட்டின் சுதேசி மன்னர்களை ஏமாற்றி ,பிரிட்டிஷ் சமராஜியத்தை பெருக்கிக்கொண்டே போன வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரல்களுக்கு பாராளுமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் அவர்கள்!அவர்களைப் போன்றவர்களைப் பார்த்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெர்னார்ட்ஷா சொன்னார் “அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்று! நம் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன சொல்வார்?எங்கள் மாமா மர்ஹூம் S.M. அபூபக்கர் அவர்கள் முற்போக்கு சிந்தனைவாதி! சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி போன்ற தரமான பத்திரிகைகளைப் படிப்பார்கள். நாங்கள் கல்கண்டு பத்திரிகையை படிப்போம்! உமர் 4, 5 வகுப்புகளில் படிக்கும்போதே கல்கண்டைப் படிக்கத் துவங்கிவிட்டார்! கல்கண்டின் ஆசிரியர், புரட்சி எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள், வாசகர் கேள்விகளுக்குத் திறமையாகவும் நகைச் சுவையாடும் பதில் சொல்வார்! வட நாட்டு பாபுராவ் படேலுக்கு இணையாக கேள்விகளுக்குப் பதில் சொல்வார். அதில் வரும் அரசியல் கருத்துக்களை உமர் விரும்பிப் படிப்பார். சில நாட்களுக்குப் பிறகு கல்கண்டில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வந்தன. தயவு தாட்சண்யமின்றி எல்லாரையும் விளாசுவார். அவருடைய விமரிசனத்துக்கு ஆளாகாதவர்கள் யாரும் இல்லை! அந்த வகைக் கட்டுரைகள் உமரை மிகவும் கவர்ந்தன.இதே கொள்கையைத் தாங்கிக் கொண்டு துக்ளக் வெளி வந்தது. அவற்றில் ஆழ்ந்த கருத்துக்களோடு, வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய நகைச் சுவைகளும் வரும். ம

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14
Linkup

சமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலா?
ஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரை!


உமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான்! சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான்! மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது! உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது! ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள்! இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது! காந்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார்! மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்! கண்ணியத்தின் சின்னமான இஸ்மாயில் சாகிப் தன் ஓட்டு வீட்டுக்குத் தாமே ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார். கர்மவீரர் காமராஜர் தன் அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகத்தை தன் முஷ்டியில் அடக்கினார்.

இந்தியாவின் விடுதலைக்காக காங்கிரசும், முஸ்லிம் லீகும் பாடுபட்டன. இரு கட்சிகளின் தேசியப் பற்றில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காந்திஜி 1940-களில் காங்கிரசையும், முகம்மது அலி ஜின்னா முஸ்லிம் லீகையும் வழி நடத்திச் சென்றனர். முஸ்லிம் லீகில் மற்ற மதத்தவர்கள் இல்லாவிட்டாலும் காங்கிரசில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருந்தார்கள். உதாரணம் மவுலான அபுல் கலாம் ஆசாத்! காங்கிரசை எங்கள் மாமா, மற்றும் S.K.M.H. அவர்களின் தந்தை ஆகியோரும், முஸ்லிம் லீகை என் தந்தை போன்றோரும் தீவிரமாக ஆதரித்தார்கள். ஆனால் இரு சாராரிடமும் வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான கொள்கை இருந்தது. தமிழ் நாட்டில் பெரியார், இராஜாஜி போன்றவர்கள் காங்கிரசில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் போன்றவர்கள் முஸ்லிம் லீகில் இருந்தார்கள். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் வடக்கே பிரிவினைகள் ஏற்பட்டன. தென்னாட்டில் அப்படிப்பட்ட நிலை இல்லை!

1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடும்படி காந்திஜி சொன்னார்! காந்திஜிக்கு அப்போதே தெரிந்துவிட்டது, அரசியல் வாதிகள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவை கடித்துக் குதறிவிடுவார்கள் என்று! காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகினர். பெரியார், இராஜாஜி போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கினர். பெரியார் திராவிடக் கட்சியும் இராஜாஜி சுதந்திரா கட்சியும் ஆரம்பித்தனர். காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் தலைவரானார். இராமமூர்த்தி மற்றும் கல்யாண சுந்தரம் தலைமையில் கம்யூனிஸ்டு வலது இடது கட்சிகளும் தோன்றின. ஒவ்வொரு கட்சியும் உடைந்து, உடைந்து சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து, பல்கிப் பெருகிவிட்டன! அண்ணாதுரை, திராவிடக் கட்சியிலிருந்தும், ஈ.வி.கே. சம்பத், அண்ணா தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும், எம்.ஜி.ஆர்., கருணாநிதி தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் பிரிந்து, தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர்! அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் குட்டிகள் போட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. இதைத் தொடந்து ஜாதிக் கட்சிகளும் தோன்றின! தோன்றிக் கொண்டிருக்கின்றன! குப்பையை அள்ளி சாக்கடையில் போட்ட மாதிரி, சினிமாக்காரர்கள் அரசியலில் குதித்தார்கள். இதுவல்ல அதிசயம்! சினிமா நடிகர்கள் தங்கள் ஜாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்கள்! இது பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகள் நிறைந்த சாக்கடையில் அள்ளிப் போட்ட மாதிரி! போதாததற்கு திராவிட பேனருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் வேறு தோன்றியது! விடுதலை தந்த காந்தியைப் பின் பற்றப் போவதாக அரசியலில் குதித்தவர்கள், விஜய சாந்தியைப் பின் பற்றும் அரசியல் வாதிகளாக மாறினார்கள்!

இந்த மாதிரியான அருவருக்கத்தக்க காரணங்களால் உமர் அரசியலை மேலும் வெறுத்தார். அரசியலை வெறுக்கும் பண்பு உமரிடம் எப்படி வந்தது? நான் உமருக்கு பெர்னார்ட்ஷா பற்றி சொல்லி இருக்கிறேன். அவரும் படித்திருக்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றம், பாராளுமன்றங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்கள் உலகத்திலேயே தரம் வாய்ந்த அரசியல் வாதிகள்! நம் நாட்டின் சுதேசி மன்னர்களை ஏமாற்றி ,பிரிட்டிஷ் சமராஜியத்தை பெருக்கிக்கொண்டே போன வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரல்களுக்கு பாராளுமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் அவர்கள்!அவர்களைப் போன்றவர்களைப் பார்த்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெர்னார்ட்ஷா சொன்னார் “அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்று! நம் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன சொல்வார்?

எங்கள் மாமா மர்ஹூம் S.M. அபூபக்கர் அவர்கள் முற்போக்கு சிந்தனைவாதி! சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி போன்ற தரமான பத்திரிகைகளைப் படிப்பார்கள். நாங்கள் கல்கண்டு பத்திரிகையை படிப்போம்! உமர் 4, 5 வகுப்புகளில் படிக்கும்போதே கல்கண்டைப் படிக்கத் துவங்கிவிட்டார்! கல்கண்டின் ஆசிரியர், புரட்சி எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள், வாசகர் கேள்விகளுக்குத் திறமையாகவும் நகைச் சுவையாடும் பதில் சொல்வார்! வட நாட்டு பாபுராவ் படேலுக்கு இணையாக கேள்விகளுக்குப் பதில் சொல்வார். அதில் வரும் அரசியல் கருத்துக்களை உமர் விரும்பிப் படிப்பார். சில நாட்களுக்குப் பிறகு கல்கண்டில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வந்தன. தயவு தாட்சண்யமின்றி எல்லாரையும் விளாசுவார். அவருடைய விமரிசனத்துக்கு ஆளாகாதவர்கள் யாரும் இல்லை! அந்த வகைக் கட்டுரைகள் உமரை மிகவும் கவர்ந்தன.

இதே கொள்கையைத் தாங்கிக் கொண்டு துக்ளக் வெளி வந்தது. அவற்றில் ஆழ்ந்த கருத்துக்களோடு, வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய நகைச் சுவைகளும் வரும். மற்ற பத்திரிகைகள் தங்கள் அரசியல் தலையங்கத்தோடும், கார்ட்டூன்களோடும் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் துக்ளக் முழுதும் அரசியல்தான், ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. துணிச்சலான அரசியல் விமர்சனங்களுக்காகவும் நகைச் சுவைகளுக்காகவும் உமர் துக்ளக்கை விரும்பிப்படிப்பார்.

இதே துணிச்சலோடும் நேர்மையோடும் ‘உணர்வு’ என்ற இஸ்லாமிய வாரப் பத்திரிகை வெளி வந்தது. இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னற்றக் கழகத்தின் பத்திரிகை. வாரம் தவறாமல் உணர்வை உமர் வாங்குவார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தங்கள் சமுதாயத்தார்க்கு இழைக்கப்படும் தீமைகளைப் பற்றியும், வழங்கப்பட வேண்டிய சலுகைகளைப் பற்றியும் மட்டுமே பேசுகின்ற அரசியல் சாரா இயக்கம்! அதனால் உமர் அதன் பத்திரிகைகளையும் ஆதரித்தார். உணர்வைத் தொடந்து வந்த ஒற்றுமை மாதமிரு முறை பத்திரிகையையும் உமர் வாங்கத் துவங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தொடர்பான ஆடியோ வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து போட்டுக் கேட்பார். “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?” என்ற ஒரு நிலை இருந்தது! எப்பொழுது அவர்கள் அரசியலில் குதித்தார்களோ, அப்பொழுதே உமர் அந்தக் கழகத்தைக் கை கழுவிவிட்டார்!

அரசியலில் சேராவிட்டால் என்ன நன்மை? நல்ல வேட்பாளர் கண்களுக்குத் தெரிவார்! மாற்றி யோசிக்கலாம்! ஆட்சி மாற்றம் கொண்டு வரலாம்! எங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் மொரார்ஜி தலைமையில் 64 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 18 மாத கால ‘பொற்கால ஆட்சி’யைக் கொண்டு வந்தோம்! கடவுச் சீட்டு விரைவாக விநியோகிக்கப்பட்டது! ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டது! உதவித் தொகை உயர்த்தப் பட்டது! விலைவாசி என்றுமில்லாத அளவுக்கு மிகக் குறைந்தது! இதைப் போன்ற நல்ல ஆட்சியைப் பெற, பல நல்ல காரியங்களைப் பெற முஸ்லிம் இயக்கங்கள் மக்களுக்கு வழி காட்டவேண்டும். த.மு.மு.க. அப்படி செய்ய இறங்கித்தான் சேற்றில் காலை விட்டுக் கொண்டது! அல்லாஹ்வின் ஒற்றுமைக் கயிற்றை விட்டு விட்டு அரசியல் களத்தில் குதித்தார்கள். ஒன்றாகக் கலந்திருந்தபோது பதநீராக இனித்தவர்கள், பிரிந்த பிறகு வெறும் பனை நீராகவும், சுண்ணாம்பாகவும் ஆகிவிட்டார்கள்!

சென்ற தேர்தலில் தி.மு.க. வுக்காக இவர்கள் பிடித்த கொடிகள், தி.மு.க. வின் கொடிகளைவிட உயரப் பறந்ததோடு, எண்ணிக்கையில் அவற்றைவிட அதிகம் இருந்தன! அந்தக் காட்சியைப் பார்த்து நகைத்தார் உமர்!. ‘ஒற்றுமையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, ஓட்டுக்காக யாசிக்கும் வேட்டைக்காரர்கள் ஆகிவிட்டார்களே’ என்று நொந்தார். புகழ் பெற்ற ஜூலை 4 மாநாட்டை நடத்தி இன்றைய முதல்வருக்கு மேடை தந்து, அவரின் இரண்டாவது அரசியல் வாழ்வுக்கு துவக்கம் தந்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நன்றி மறத்தலை, மறக்காமல் செய்தார் ஜெ! மீண்டும் மு.க.! முகத்தில் கரி! மீண்டும் ஜெ! ச்சே! இப்போது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்! இந்தியாவில் முஸ்லிம் இயக்கங்கள் பிற இயக்கங்களைச் சார்ந்து வாழும் (PARASITES) இயக்கங்களாகத்தான் இருக்கின்றன். இப்படிப்பட்ட போக்கு உமறுக்குப் பிடிக்காது. இப்போது பேரூராட்சி தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. கூட்டணி தர்மம் குப்பையோடு குப்பையாகப் போய்விட்டது!

வேட்பாளர்கள், தாங்கள் தேர்தலில் நிற்பதற்காகக் கட்சித் தலைமைக்குக் கப்பம் கட்டியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது! முன்பே மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்களுக்குக் கப்பம் எதற்கு? அந்தப் பணத்தை எல்லாம் சேர்த்து ஊருக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கலாம் அல்லவா? அதைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரித்திருக்கலாம் அல்லவா? சமுதாய நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகலாம் அல்லவா?

சரி எல்லாம் நடந்துவிட்டது. இனி வெற்றி பெற்று வருபவர்கள், செலவு செய்த பணத்தை எடுக்கும் முயற்சியில் அவசர அவசரமாக இறங்காமல், செலவில்லாத சிறு சிறு பணிகளிலாவது இறங்கலாம். நானும் உமரும் நடைப் பயிற்சி செய்யும்போது காணும் காட்சிகள் அவரைக் குமுற வைக்கும். அவை: 1)தெருவுக்கு தெரு கறிக்கடை, 2) பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துதல், 3)பொருத்தமில்லாத ஒலி எழுப்பிகளை வாகனங்களில் பொருத்திக்கொண்டு பொருத்தமில்லாத இடங்களில் அர்த்தமில்லாமல் ஒலி எழுப்புவது, 4)பெண்களும் குழந்தைகளும் நடமாடும் இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 5) வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்ள இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 6) எல்லா நேரங்களிலும் சாலைகளின் சந்திப்பில் ஏற்படும் குழப்பங்கள்.

மேற்கண்டவற்றில் இரண்டை மட்டும் அடிக்கோடிட்டுக் குறிப்பிடுகிறேன். அவை பிளாஸ்டிக் கரியும் ஆட்டுக் கறியும் தொடர்பானவை. பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துவதை உடனே நிறுத்தவேண்டும். அதனால் நுரையீரல் புற்று நோய் வரும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். ஹஜ்ஜில் செய்வது மாதிரித் தெருவில் ஆடுகளை அறுத்து இரத்தத்தை ஓட விடுவது ஹஜ்ஜை நினைவூட்டுகிறது. இதனால்தான் அதிரையை ‘சின்ன மக்கா’ என்கிறார்களோ என்னவோ! இன்னும் நாம் பெரிய 'மக்காக' இருக்காமல், இவர்களின் அனுமதியை ரத்து செய்யவேண்டும். கடைத் தெருவில் கடை வைக்கச் செய்யவேண்டும். மேற்கண்ட காரியங்களை வெற்றி பெற்றவர் செய்தால்
உமரின் எண்ணங்கள் போற்றப்பட்டவையாக இருக்கும்!

வெற்றி பெறுபவர் ஐந்து ஆண்டுகளில், புதிராய் விளங்கும் அதிரா அதிரையை சிரிக்கும் சிங்காரச் சிங்கையாக விரைவில் மாற்ற முடியுமா? முடியும்! அக்பரின் முன்னோடி என்றும், நவீன நாணய முறையின் தந்தை என்றும், நிர்வாகச் சிற்பி என்றும், நீதியின் ஊற்று என்றும் பேசப்படுகிற செர்ஷா, ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்து, வரலாற்று ஆசிரியர்களின் இதயாசனத்தில் வீற்றிருக்கவில்லையா?

தொடரும்...



வாவன்னா, M.A.,B.Ed.(வரலாறு)
(உமர்தம்பிஅண்ணன்)